இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு ஆச்சரியமளிக்கிறது - கவுதம் கம்பீர்!

Updated: Sun, Oct 30 2022 17:34 IST
Image Source: Google

பெர்த் நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக அக்சர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை பிளேயிங் லெவனில் சேர்த்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கம்பீர், “இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்க்கும போது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 2 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், எதற்காக அணியை மாற்றினார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் கடந்த போட்டியில் தான் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி கொடுத்து இருக்கிறார்.

ஒரு வேலை தென் ஆப்பிரிக்க அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அக்சர் பட்டேலை வெளியே அனுப்பி இருப்பார்கள். தீபக் ஹூடாவும் பந்துவீசுவார். இது சாதகமான விசயம் தான். இப்போது பேட்டிங்கை நீங்கள் வலுப்படுத்தியதால் , முதல் பந்தில் இருந்த அதிரடியாக விளையாட வேண்டும். அப்போது தான் தென் ஆப்பரிக்காவை சமாளிக்க முடியும்.

இந்திய அணி டி20 உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் இந்தியாவுக்கு X ஃபேக்டார் ஆக இருப்பார்கள். அதற்காக ரோகித், கோலி எல்லாம் ரன் அடிக்காமல் இருந்தால் பரவாயில்லை என சொல்லவில்லை. ரபாடா போன்ற பந்தவீச்சாளரை கோலி அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க வேண்டும்.

இந்தியா தங்களுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதே வெற்றியை கொடுக்கும் என்று கம்பீர் கூறினார். இதே கேருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் வீராங்கனை மித்தாலி ராஜ், இந்தியா முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட வேண்டும். அந்த யுத்தியிலிருந்து மாற்றிக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி லுங்கி இங்கிடியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை