ஐபிஎல் 2022: டெல்லி அணியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வாட்சன்!

Updated: Sat, Apr 23 2022 13:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் பாவல் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார். இந்நிலையில் 3ஆவது பந்தை அவர் எதிர்கொண்ட போது ஃபுல்டாஸுக்கும் மேல் வந்தது போல தெரிந்தது. இதனால் நோ பால் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நடுவர்கள் நோ பால் எதுவும் கொடுக்காமல், 3ஆவது நடுவரிடமும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி கேப்பிடல் அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் அம்ரே நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய களத்திற்கு வந்தார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடைசி ஓவரில் நடந்த சம்பவம் வருந்ததக்கது. நடுவரின் முடிவு, அது சரியோ தவறோ அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய ஒருவர் களத்திற்கு வருவது ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல. 

நடுவர்கள் தான் விளையாட்டின் போது ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை