கடந்த 2014 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரன் மழை பொழிந்து 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று கேப்டனாகவும், 2016-ல் கோப்பையையும் பெற்றுக் கொடுத்தவராகவும் திகழ்ந்த டேவிட் வார்னரை, கடந்த வருடம் சுமாராக செயல்பட்டார் என்ற காரணத்துக்காக பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம், பெஞ்சில் அமர வைத்து இறுதியில் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது.

Advertisement

இதனைத் தொடர்ந்து 15ஆவது சீசனில், 6.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், நாட்டுக்காக விளையாடியதால் ஆரம்பத்தில் 3 போட்டிகளை தவற விட்ட நிலையில் பங்கேற்ற எஞ்சிய 12 போட்டிகளில் 5 அரை சதங்கள் உட்பட 432 ரன்களை 48.00 என்ற சிறப்பான சராசரியில் 150.52 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சிறப்பாக செயல்பட்டார்.

Advertisement

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி, கடைசி நேரத்தில் மும்பையிடம் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இதனைத் தொடர்ந்து வார்னர் உட்பட அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடியது குறித்து வார்னர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “டெல்லிக்காக விளையாடியது மிகவும் மகிழ்ச்சிதான். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஷான் மார்ஷ் உப்ட சில தெரிந்த முகங்கள் இருந்ததால், ஆஸ்திரேலிய வீரர்களுடன் சொந்த மண்ணில் விளையாடியது போல உணர்ந்தேன்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவரிடம், நீண்ட காலத்திற்கு பிறகு டெல்லி அணிக்கு வந்துருக்கிங்க. பழைய மாதிரியே ரசிகர்கள் ஆதரவு இருந்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வார்னர், “இங்கு 3 குறிப்பிட்ட அணிகள் இருக்கின்றன. அது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த மூன்று அணிகளுக்கு எதிராக விளையாடினால், எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இந்த அணிகளுக்கு மட்டுமே இருக்கிறது” என தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News