ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Oct 03 2021 20:44 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மேலும் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 18 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதிலும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. 

இருப்பினும் கடந்த போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் சரிவர செயல்படாதது அணிக்கு சற்றுப்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் நிச்சயம் சென்னை அணியில் பிராவோ விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சீசனில் 18 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும் கடந்த போட்டியில் அணியின் பேட்ஸ்மேன்கள் சரிவர செயல்படாதது அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் ஆவேஷ் கான், அக்சர் படேல், ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் வெற்றிக்கு வழிவகை செய்துவருகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • டெல்லி வெற்றி -9
  • சென்னை வெற்றி - 15

உத்தேச அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித்/ சாம் பில்லிங்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா/ ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, சாம் கரனண்/ டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர்/ தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட்/ ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல் -ரவுண்டர்கள் - அக்ஸர் பட்டேல், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா
  • பந்து வீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான், ஷர்துல் தாக்கூர்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை