கரோனா அச்சுறுத்ததால் ஒத்திவைக்கப்பட்ட கவுண்டி போட்டி!

Updated: Mon, Jul 12 2021 20:07 IST
Derbyshire vs Essex County Match Abandoned After Covid Positive Case
Image Source: Google

இங்கிலாந்தின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் கவுண்டி. இத்தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் டெர்பி - எஸ்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளப் பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் டெர்பி அணியைச் சேர்ந்த சிலருக்கு கரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி இப்போட்டியில் ரத்து செய்வதாக கவுண்டி கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

அதேசமயம் இப்போட்டியை காண அனுமதி சீட்டுகளைக் பெற்றிருந்த பார்வையாளர்களுக்கு அவர்களது பணம் திரும்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை