காலின் முன்ரோ சாதனையை சமன்செய்த டெவான் கான்வே!
Devon Conway Record: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் டெவான் கான்வே அரைசதம் அடித்ததன் மூலம் முன்னாள் வீரர் காலின் முன்ரோவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டெவான் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் சில சாதனையையும் படைத்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் டெவான் கான்வே அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 11ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த இடதுகை வீரர் எனும் காலின் முன்ரோவின் சாதனையை டெவான் கான்வே சமன் செய்துள்ளார். முன்னதாக காலின் முன்ரோ 62 இன்னிங்ஸ்களில் 11 அரைசதங்களை அடித்ததே சாதனையாக இருந்தது.
தற்சமயம் டெவான் கான்வே 48 இன்னிங்ஸில் 11 அரைசதங்களை கடந்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். இதுதவிர்த்து நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிம் செஃபெர்டின் சாதனையை முறியடியடுத்துள்ளார். இதற்கு முன் டிம் செஃபெர்ட் 10 அரைசதங்களை கடந்து 5ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் டெவான் கான்வே அவரை முந்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக அதிக அரைசதங்களை அடித்த இடது கை வீரர்கள்
- 11* - டெவான் கான்வே (48 இன்னிங்ஸ்)
- 11 – காலின் முன்ரோ (62 இன்னிங்ஸ்)
- 8 – மார்க் சாப்மேன் (59 இன்னிங்ஸ்)
- 3 – ஜெஸ்ஸி ரைடர் (21 இன்னிங்ஸ்)
- 3 – டாம் லாதம் (23 இன்னிங்ஸ்)
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதவேரா 36 ரன்களையும், பிரையன் பென்னட் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 30 ரன்களையும், டேரில் மிட்செல் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.