ஐபிஎல் 2022: பிளே ஆஃப் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி!

Updated: Mon, May 09 2022 11:44 IST
Image Source: Google

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ரன் ரேட்டும் எகிறியது.

தற்போது சிஎஸ்கே 8ஆவது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. சிஎஸ்கே எஞ்சிய 3 போட்டியிலும் வென்று, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் சில போட்டியில் தோற்றால், சிஎஸ்கே பிளே ஆஃப்க்கு செல்லலாம்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி, “இந்த வெற்றி தேவை தான். இது சீசன் தொடக்கத்தில் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது ஒரு சரியான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். டாஸ் வென்றால் பந்துவீச தான் நினைத்தேன். ஆனால் டாஸ் தோற்க வேண்டும் என்று தோன்றியது.

ரன்கள் அதிகமாக குவிக்கும் போது அது பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். அதே சமயம், டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவதும் அவசியம். முகேஷ் சௌத்ரி, ஷிம்ரஜித் சிங் இருவருக்கும் திறமை இருக்கிறது. ஆனால் அனுபவம் நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் கிடைக்கும்.

டி20 போட்டியை பொறுத்தவரை எந்த பந்து போட வேண்டும் என்பதை விட, எந்த பந்து எப்போது வீச கூடாது என்பதை தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு எடுத்த உடனே பெரிய ஷாட்களை ஆடி ரன் குவிப்பது பிடிக்காது. ஆனால் இன்று பந்துகள் குறைவாக இருந்தது. 2 பந்தில் 8 ரன் அடித்தால் தான் அணிக்கு நல்லது. 2 பந்தில் 2 ரன் அடிப்பது அணிக்கு உதவாது.

பிளே ஆஃப் குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. பிளே ஆஃப் , நெட் ரன் ரேட் பற்றி நினைத்தால் நமக்கு தேவையில்லாத அழுத்தம் தான் ஏற்படும். அதுவும் இல்லாமல் கணக்கு எனக்கு சுத்தமாக வராது, பள்ளியிலும் கணக்கு பாடம் பிடிக்காது. 

நாங்கள் ஐபிஎல் தொடரை மகிழ்ச்சியோடு விளையாட நினைக்கிறோம். மற்ற அணிகளின் வெற்றியை எதிர்பார்த்தால் அழுத்தம் தான் மிஞ்சும். அதற்கு நமது போட்டியில் கவனம் செலுத்தலாம். பிளே ஆஃப் சென்றால் நல்லது. இல்லை என்றால் உலகம் ஒன்றும் அழிந்துவிடாது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை