இந்திய அணியின் ஆலோசகராக தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளார் - ஜெய் ஷா!
டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடர். இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை கொண்டுள்ள விராட் கோலி, முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.
மேலும், இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 அணி கேப்டனாக தனது கடைசி தொடராக அமைந்துள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் கோலி.
இந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகாராக முன்னாள் ஜாம்பவான் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் நியமனம் இந்திய அணிக்கு கண்டிப்பாக பெரியளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசிய ஜெய் ஷா, “இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட மகேந்திர சிங் தோனி எந்த ஒரு ஊதியத்தையும் கேட்கவில்லை. அவர் ஊதியமின்றி இப்போறுப்பை செய்யவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.