‘இரவு முழுவதும் தூங்க முடியவில்லை' - அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சாம் கரண்!

Updated: Sat, Dec 24 2022 13:05 IST
Image Source: Google

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் . இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கிய சாம் கரண், தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனையடுத்து பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் யுத்தம் நடைபெற, ட்இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது சாம் கரணுடன் சேர்த்து, கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸும் புதிய ரெக்கார்ட்-ஐ பதிவு செய்தனர். கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பையும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணியும் வாங்கியது.

இந்நிலையில் இந்த மகிழ்ச்சி தருணம் குறித்து பேசிய சாம் கரண் , “நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் நான் எந்த அணிக்கு செல்லப்போகிறேன், என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றத்திலேயே இருந்தேன். எனினும் எனது செயல்பாடுக்கான அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு தொகை வரும் என எதிர்பார்க்கவே இல்லை.

எங்கு தொடங்கினேனோ, அங்கு மீண்டும் சென்றது ஆச்சரியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அங்கு எனது சக வீரர்கள்  ஜானி பேரிஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை