ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 218 ரன்களை குவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கி விளையாடிய மும்பை அணி பொல்லார்டின் அதிரடியான ஆட்டத்தால் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இத்தோல்வியிலிருந்து பந்துவீச்சாளர்கள் தங்களது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தோனி “இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தான் விசயமும், வித்தியாசமும் உள்ளது. எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு இது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது, ஆனால் இக்கட்டான நேரத்தில் சில முக்கிய கேட்ச்களை தவறவிட்டு விட்டோம். 

பந்துவீச்சாளர்கள் இந்த தோல்வியில் இருந்து தங்களது தவறுகளை நிச்சயம் சரி செய்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களே எடுத்திருந்தோம். இது போன்ற தொடர்களில் இது போன்ற தோல்விகள் நிச்சயம் வர தான் செய்யும். 

தோல்விகளின் போதே நிறைய விசயங்களை கற்று கொள்ள முடியும். புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, நானும் எங்களது வீரர்களும் புள்ளி பட்டியலை பெரிதாக கவனித்து கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News