மீண்டும் ஆர்சிபி அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Jul 01 2024 11:33 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. 

அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் சீசனும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்சிபி அணியானது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து அவர் இதனை அறிவித்திருந்தார். 

அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக் தனது 39ஆவது பிறந்தநாள் பரிசாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக், 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்கள் என 3300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லையன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்களுடன் 4842 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி வரவுள்ள ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி அணியானது தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து இனி ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கை பார்க்க முடியாது என எண்ணிய ரசிகர்களுக்கு ஆர்சிபி அணியின் இந்த அறிவிப்பானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை