இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக் 

Updated: Sun, Jun 06 2021 21:00 IST
Image Source: Google

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி, தற்போது வரை விளையாடி வருகிறார். 

36 வயதாகும் தினேஷ் கார்த்திக், வயதின் காரணத்தைக் கொண்டு, மனம் உடையாமல், மீண்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆடிய தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மூன்று போட்டிகளில் களமிறங்கிய தினேஷ், அதில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் தற்போது வரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சர்வதேச பயணம் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், 'இந்திய நிர்வாகம் வயதின் அடிப்படையில் ஒரு வீரரை தேர்வு செய்வதில்லை. ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றாலே, இந்திய அணிக்காக ஒருவர் ஆட முடியும். இந்திய அணிக்காக, டி 20 உலக கோப்பை ஆட வேண்டும் என்பதே எனது இலக்கு.

அடுத்தடுத்து, டி 20 உலக கோப்பை தொடர், இரண்டு ஆண்டுகள் நடைபெறவுள்ளதால், என்னால் முடிந்த வரை இந்திய அணியில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். கடந்த காலங்களில், நான் சிறப்பாக ஆடி இருந்த போதும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் நான் சிறப்பாக ஆடாத காரணத்தால், அணியில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.

டி 20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், உலக கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு, எனக்கு டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை' என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை