இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் இணை - குவியும் வாழ்த்துக்கள்!

Updated: Thu, Oct 28 2021 21:49 IST
Image Source: Google

ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், பல்வேறு போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து, தற்போது முக்கிய வீரராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் சமீப தினங்களாக வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் பல சர்வதேச போட்டிகளுக்கு அவர் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை தினேஷ் கார்திக் அறிவித்துள்ளார். அதாவது தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், சில நாட்களிலேயே 3 ஆக (நாய் குட்டியையும் சேர்த்து) இருந்த குடும்ப எண்ணிக்கை 5 ஆக மாறியது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதில் மற்றொரு சுவாரஸ்ய விஷயமும் அடங்கியுள்ளது. குழந்தைகளின் பெயரையும் அவர் அறிவித்துவிட்டார். தங்களது குழந்தைகளுக்கு அவர் கபிர் பல்லிக்கல் கார்த்திக் மற்றும் சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::