சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. மேலும் இம்முறையும் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதுவார்கள் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதன் காரணமாக இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நடைபெற இருக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்ட்ன் சாரித் அசலங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்வதென்றால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தைப் பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை. கடந்த காலத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.
இப்போது நாங்கள் ஒரு அணியாக வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஒரே வழியில் சென்று கொண்டிருக்கிறோம். இது ஒரு நல்ல வழி என்று நான் நினைக்கிறேன், மேலும் நாங்கள் தொடர்ந்து நகர்ந்து செயல்பட வேண்டும். இப்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தத் தொடரை வெல்வதே எங்களது இலக்கு. நியூசிலாந்து ஒரு கடினமான மற்றும் நல்ல அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம், கேப்டனாக நான் வீரர்களிடமிருந்து 100 சதவீதத்தைப் பெற விரும்புகிறேன்.
அவர்கள் எந்த அழுத்தமும் இன்றி எந்த விதமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். இது எனது பங்கு என்று நான் நினைக்கிறேன், மற்ற விஷயம் என்னவென்றால், நான் ஒரு பேட்ஸ்மேனாக முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புகிறேன் மற்றும் ரன்களை அடிக்க விரும்புகிறேன். மேலும் எங்கள் அணியில் சிறப்பான வீரர்கள் பலரும் உள்ளதால் நிச்சயம் இத்தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இலங்கை டி20 அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க அபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, மதீஷ பத்திரன, நுவான் துஷார, அசித்த ஃபெர்னாண்டோ, பினுர ஃபெர்னாண்டோ
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த ஃபெர்னாண்டோ, முகம்து ஷிராஸ், லஹிரு குமார, ஈஷன் மலிங்க.