ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!

Updated: Thu, May 23 2024 14:36 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்க்ளைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34 ரன்களையும், விராட் கோலி 33 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இருப்பினும் ஒருகட்டத்தில் அந்த அணி அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரியான் பராக் 36 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிப்பதாக தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே அவர் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் 38 வயதை எட்டியுள்ள தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 6 அணிகளுக்காக 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்களுடன் 4842 ரன்களை குவித்துள்ளார். 

 

மேலும் ஐபிஎல் தொடரின் 17 சீசன்களிலும் விளையாடிய வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், அந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை