இலக்கை கிரிக்கெட் வீழ்ச்சியடையவில்லை - நவீத் நவாஸ்!

Updated: Fri, Nov 03 2023 16:18 IST
Image Source: Google

இலங்கை அணி சமீப காலத்தில் இந்திய அணியிடம் மிக மோசமான தோல்விகளை பெற்று வருகிறது. குறிப்பாக எந்த அணியிடமும் பெறாத அளவிற்கான படுதோல்விகளாக அவை அமைந்திருக்கின்றன. நேற்றைய போட்டிக்கும் முன்பாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

நேற்று உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் 357 ரன்கள் கொடுத்துவிட்டு, திரும்ப பேட்டிங் செய்ய வந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள். இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இங்கிலாந்தை வெல்வதும் பிறகு வந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்பதுமாக தான் இருக்கிறார்கள். 

இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் தரப்பிலிருந்து பேசிய நவீத் நவாஸ், “இது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு விஷயம்தான். ஆனால் நான் இதை இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியாகப் பார்க்கவில்லை. எங்களிடம் 100 ஒருநாள் போட்டிகள் விளையாடிய சில வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மீதம் பெரும்பான்மையானவர்கள் இளம் கிரிக்கெட் வீரர்கள். நாங்கள் இருக்கும் நிலையில் இருந்து இது மறுக்கட்டு அமைப்பு செய்வதற்கான நேரம்.

பல இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளே வந்து தற்பொழுது நான் சொல்லிக் கொண்டிருப்பதை கற்று தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எங்கள் குழுவிற்கு இன்னும் அற்புதமான வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தற்பொழுது இதுதான் எங்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை. பாகிஸ்தானில் 2015 ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரவேண்டும்.  இதற்கு நாங்கள் எங்களுடைய வீரர்களை ஊக்குவிக்க ஒரு காரணியை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே தான் எங்களுக்கு உலகக் கோப்பைக்கு வருவதற்கான உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கும் நடந்தது. எங்களிடம் அழகான இளம் அணி இருக்கிறது நாங்கள் நிச்சயம் மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை