இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஹனுமா விஹாரி தலைமையில் தெற்கு மண்டல அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ரிக்கி புய், ஸ்ரீகர் பரத், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், கவரப்பா, வைஷாக், சசிகாந்த், தர்ஷன் மிசல் போன்றோர் இடம்பெறுள்ளனர்.
ஆனால் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது குறித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “பாபா இந்திரஜித் மார்ச் முதல் வாரத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக மத்தியபிரதேசத்திற்கு எதிராக ஆடியிருந்தார். அதன்பிறகு, முதல்தர போட்டிகள் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், இப்போது நடக்கவிருக்கும் துலீப் கோப்பை தொடரில் தெற்கு பிராந்திய அணியில் இந்திரஜித் சேர்க்கப்படவில்லை.
தேர்வுக்குழுவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. யாராவது இதற்கான காரணத்தை விளக்க முடியுமா?" என்று பதிவிட்டிருக்கிறார். தேர்வுக்குழுவை கேள்வி கேட்டு தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருக்கும் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.