எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்திய ஏ அணி அறிவிப்பு!

Updated: Wed, Jul 05 2023 11:52 IST
Image Source: Google

எமர்ஜிங் பிளேயர்ஸ்க்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்  தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில்  வரும் 13ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்,இலங்கை உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றனர்.

பிசிசிஐ பொறுத்த வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஏ அணி  அணியை அனுப்புகிறது. ஒரு காலத்தில் இந்திய ஏ அணி தொடரை அவ்வப்போது நடத்தும் பிசிசிஐ கரோனாவுக்கு பிறகு அதில் ஆர்வம் காட்டாமல் விட்டது. இது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை  பாதித்தது. இந்திய அணி பல்வேறு தொடர்களில் தோல்வி அடைந்ததற்கு இந்திய ஏ அணி போட்டிகளை நடத்தாமல் விட்டது தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 

ஏனெனில் ஏசிசி நடத்தும் எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கிறது. இந்த தொடர் தொடங்க பத்து நாட்களை உள்ள நிலையில் கடைசி கட்டத்தில் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும்,உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய வீரர்களுக்கும் சரிசம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த ஏ அணி போட்டியில் கூட சர்பிராஸ்கான் இடம் பெறவில்லை. அண்டர் 19 உலககோப்பையை வென்று தந்த யாஷ் தூல், இந்த தொடரில் இந்திய ஏ அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய  தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்த தொடரில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதே போன்று உள்ளூர் போட்டியில் கலக்கிய மற்றொரு தமிழக வீரர் ரஞ்சன் பாலுக்கும் இடம் கிடைத்துள்ளது. மேலும் சிஎஸ்கே இளம் வீரர்கள் ராஜவர்த்தனே ஹங்கர்கேகர், நிஷாந்த் சிந்து,ஆகாஷ் சிங் உள்ளிட்ட வீரர்களும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரலும், சன்ரைசர்ஸ் வீரர் அபிசேக் சர்மாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பஞ்சாப் அணியில்  பிராப்சிம்ரன் சிங்கிற்கும் இடம் கிடைத்திருக்கிறது. மும்பை அணியின் நேஹல் வதேராவுக்கு கூடுதல் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. இந்திய ஏ அணியின் தலைமை  பயிற்சியாளராக சித்தான்சு கோடாக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஏ அணி: சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா, நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கே), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜூரல், மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை