Emerging teams asia cup 2023
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை இலங்கையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அதில் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாக் அவுட் சுற்றிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இருப்பினும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் 350க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து வெற்றி வாகை சூடியது.
ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக லீக் சுற்றில் சதமடித்த தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் நிக்கின் ஜோஸ் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நடுவர்கள் வழங்கிய கண்மூடித்தனமான தீர்ப்பு இந்தியாவின் தோல்வியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது. இருப்பினும் அந்த தொடரில் விளையாடிய இந்திய வீரர்களில் யாருமே ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவத்தை கொண்டிராத போதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது.
Related Cricket News on Emerging teams asia cup 2023
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச ஏ அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய ஏ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
இலங்கை ஏ அணிக்கு எதிரான அரைசயிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இந்தியாவை 211 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச ஏ அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இதிய ஏ அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
பாகிஸ்தான் ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய ஏ அணிக்கெதிரான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்திய ஏ அணி அறிவிப்பு!
எமர்ஜிங் பிளேயர்ஸ்க்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான யாஷ் துல் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47