ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஐக்கிய அரபு அமீரக அணி பலப்பரீட்சை நடத்தியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணியில் ராகுல் சோப்ரா அரைசதமடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் ஐக்கிய அரபு அமீராக அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரஷிக் தர் சலாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பிரப்சிம்ரன் சின் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.  அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் சிரப்பாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவருடன் இணைந்து விளையடைய கேப்டன் திலக் வர்மா 21 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதியில் நெஹல் வதேரா 6 ரன்களையும், அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா ஏ அணி 10.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஷிக் தர் சலாம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பிடித்த கேட்ச் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை விளையப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை இந்திய அணி தரப்பில் ரமந்தீப் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தை ஃபுல் லெங்த்தில் லெக்-ஸ்டம்பை நோக்கி வீசினார். அதனை எதிர்கொண்ட யுஏஇ வீரர் ஜவதுல்லா அந்த பந்தை லாங்-ஆன் நோக்கி பவுண்டரி அடிக்க முயன்றார்.

Advertisement

அதேசமயம் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஆயூஷ் பதோனி அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத கிரிக்கெட் ரசிகர்கள் ஆயூஷ் பதோனியின் இந்த அபாரமான கேட்ச்சை வியப்புடன் பார்த்தனர். இதனால் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஜவதுல்லா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஆயூஷ் பதோனி பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News