இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Fri, Jul 04 2025 13:00 IST
Image Source: Cricketnmore

England Women vs India Women 3rd T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

EN-W vs IN-W 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
  • இடம் -  கெனிங்டன் ஓவல் மைதானம், லண்டன்
  • நேரம்- ஜூலை 04, இரவு 11.00 மணி (இந்திய நேரப்படி)

Kennington Oval, Landon Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 20 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 10 முறையும், முதலில் பந்துவீசிய அணி 09 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 151 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 137 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 211 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

EN-W vs IN-W T20I Series: Where to Watch?

இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.

EN-W vs IN-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 32
  • இங்கிலாந்து - 22
  • இந்தியா - 10

EN-W vs IN-W 3rd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - எமி ஜோன்ஸ், ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டங்க்லி, ஷெஃபாலி வர்மா, டாமி பியூமண்ட்
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர்
  • பவுலர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், ஸ்ரீ சாரணி

England Women vs India Women Probable Playing XI

England Women Probable Playing XI: சோபியா டங்க்லி, டேனியல் வயட்-ஹாட்ஜ், மையா பௌச்சர், டாமி பியூமண்ட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்ஸி, சோஃபி எக்லெஸ்டோன், எம் ஆர்லாட், லாரன் ஃபில்லர், லின்சி ஸ்மித், லாரன் பெல்

India Women Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சாரணி

EN-W vs IN-W 3rd T20I Dream11 Prediction, EN-W vs IN-W Dream11 Team, Fantasy Cricket Tips, EN-W vs IN-W T20I Series, EN-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Women vs India Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை