ENG vs IND 2nd Test, Day 2: சிராஜ் அசத்தல்; ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்! 

Updated: Fri, Aug 13 2021 23:33 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2ஆவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோக்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் சேர்க்காமல் 129 ரன்களில் ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல். இதன்பிறகு இந்த டெஸ்டிலாவது நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 1 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த், 37 ரன்களிலும், ஜடேஜா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்துது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5, ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளைக்கு பிறகு சிராஜ் வீசிய ஓவரில் டோமினிக் சிப்லி, ஹசீப் ஹமீத் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோரி பர்ன்ஸும் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

அதன்பின் ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை நிதானமான அட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலனது அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களைச் சேர்த்தது. 

இதில் ஜோ ரூட் 48 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை