ENG vs IND, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!

Updated: Sun, Aug 15 2021 18:08 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால்(180*) முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததோடு, 3ஆம் நாள் ஆட்டம் முடிந்தது.

அதன்பின் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு நல்ல இன்னிங்ஸை ஆடி, மீண்டுமொரு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்புடன் களத்திற்கு வந்தனர் ரோஹித்தும் ராகுலும்.

இருவரும் 9 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், மார்க் உட் வீசிய 10வது ஓவரில் 5 ரன்னில் ராகுலும், அடுத்த ஓவரில் 21 ரன்களில் ரோஹித் சர்மாவும் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதன்பின்னர் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த விராட் கோலி, 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்த நிலையில் சாம் கரனின் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் மற்றும் ராகுலை தொடர்ந்து விராட் கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

இதையடுத்து புஜாரா - ரஹானே ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். இருவருமே சீனியர் வீரர்கள் தான் என்றாலும், அவர்கள் ஃபார்மில் இல்லை. ஆனால் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்திய அணியை காப்பாற்ற அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். 

இதனால் இந்திய அணி 4ஆம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் அடித்துள்ளது. இதில் புஜாரா 3 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை