அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!

Updated: Thu, Aug 26 2021 14:03 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்கள் ஜேம்ஸ் ஆண்டா்சன், கிரெய்க் ஓவா்டன் ஆகியோா் முற்றிலுமாக சரித்தனா். ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். 3 போ் டக் அவுட்டாகினா். 

இதில் இங்க்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 52, ஹசீப் ஹமீது 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இதன் மூலம் இங்கிலாந்து அணி, 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் முதல் நாளன்று எல்லைக்கோட்டின் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சிராஜ் மீது பார்வையாளர் பகுதியிலிருந்த ரசிகர் ஒருவர் பந்தை வீசியுள்ளார். இதுபற்றி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியதாவது “சிராஜ் மீது ஒருவர் பந்தை வீசியுள்ளார் என எண்ணுகிறேன். இதனால் விராட் கோலி வேதனையடைந்தார். ஃபீல்டர்களிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் எதையும் அவர்கள் மீது வீச வேண்டாம். இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல” என்றார். 

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது இப்படி நடந்துகொள்வது முதல்முறையல்ல. 2ஆவது டெஸ்டில் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது இந்திய வீரர் கே.எல். ராகுல் மீது பாட்டில் மூடியை ஒரு ரசிகர் வீசினார். இதை அறிந்த விராட் கோலி, பாட்டில் மூடிகளை எறிந்தவர் மீதே திருப்பி வீசச் சொன்னார். தற்போது சிராஜ் மீது பந்தை எறிந்த விவகாரம் குறித்து இந்திய அணி ஐசிசியிடம் புகார் அளிக்குமா என இனிமேல் தான் தெரியவரும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை