ENG vs IND, 4th Test: அடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ்; நின்று விளையாடும் பேர்ஸ்டோவ், போப்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி, ஷர்துல் தாக்கூரின் அரைசதத்தால் 191 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்தது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ரோரி பர்ன்ஸ், ஹாசீப் ஹமீத், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் ஓவர்டன் ஒரு ரன்ன்னோடு வெளியேற, மறுமுனையிலிருந்த டேவிட் மாலன் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர்களது விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஒல்லி போப் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறது. இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இங்கிலாந்து அணி தரப்பில் ஜானி பேர்ஸ்டோவ் 34 ரன்களுடனும், ஒல்லி போப் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.