ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Jul 05 2023 20:32 IST
Image Source: CricketNmore

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஹெடிங்க்லே, லீட்ஸ்
  • நேரம் - மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம் 

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்,  கடந்த டெஸ்டில் பேர்ஸ்டோவ் அவுட் விவகாரம் அந்த அணியை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. 

இதனால் இப்போட்டில் வெற்றிபெற்று விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங் ஆகியோரு நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், மோயின் லி ஆகியோரை சேர்த்துள்ளனர்.  

அதேசமயம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 1 சதம், 2 அரைசதத்துடன் 300 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல ஸ்டீ ஸ்மித், டிரெவிஸ் ஹெட், கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளதால் இப்போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 358
  • ஆஸ்திரேலியா- 152
  • இங்கிலாந்து - 110
  • முடிவில்லை - 96

உத்தேச லெவன்

இங்கிலாந்து: ஜேக் கிரௌலி, பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட். 

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் (கேட்ச்), டோட் மர்பி, மிட்செல் ஸ்டார்க் . 

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், பென் டக்கெட்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா (கே), டிராவிஸ் ஹெட்
  • ஆல்ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ் (துணை கேப்டன்), ஜோ ரூட்
  • பந்துவீச்சாளர்கள் - ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஒல்லி ராபின்சன்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை