ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!

Updated: Wed, Aug 11 2021 10:27 IST
Image Source: Google

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில் பங்கேற்கபதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நேற்றைய தினம் லண்டன் புறப்பட்டது. லண்டன் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினமே தங்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். 

 

இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் புகைப்படும் மற்றும் காணொளியை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது அப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::