இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Tue, Jul 22 2025 22:17 IST
Image Source: Cricketnmore

England vs India 4th Test Dream11 Prediction: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

ENG vs IND 4th Test Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
  • இடம் -  ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மான்செஸ்டர்
  • நேரம்- ஜூலை 23, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)

Old Trafford, Manchester Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 86 டெஸ்ட் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், முதலில் பந்துவீசிய அணி 17 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 331 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 169 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக  656 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs IND Test Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 139
  • இங்கிலாந்து- 53
  • இந்தியா- 36
  • முடிவில்லை - 50

ENG vs IND 4th Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், ஜேமி ஸ்மித்
  • பேட்ஸ்மேன்கள் - ஜோ ரூட் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், லியாம் டாசன்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ENG vs IND Predicted Playing 11

England Playing XI : ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

India Probable XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா/அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

ENG vs IND 4th Test Dream11 Prediction, ENG vs IND Dream11 Team, ENG vs IND Test Series, Fantasy Cricket Tips, ENG vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs India

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை