கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?

Updated: Thu, Sep 09 2021 22:37 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது போட்டி நாளை மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் அகியோரைத் தொடர்ந்து பிசியோ யோகஷ் பர்மருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் நாளை ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுமான என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்டம் குறித்த தெளிவான பார்வை இந்திய நேரப்படி நள்ளிரவுதான் தெரியவரும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கரோனா பரிசோதனை முகமை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணியளவில் வரும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிசியோதெரபிஸிட் நிதின் படேல் தனிமையில் இருந்ததால் கடந்த சில நாள்களாக யோகேஷ் பர்மர் இந்திய வீரர்களுடன் செயல்பட்டு வந்தார். அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை