ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
தற்போதுள்ள கிரிக்கெட் விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுவரை சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைக்கப்பட்ட பல சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாகவே விராட் கோலி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு கோலி இன்னும் சதமடிக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் தனது சாதனை பயணத்தை தொடர இங்கிலாந்து தொடர் சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு கேப்டனாக இதுவரை 41 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, ரிக்கி பாண்டிங்குடன் அந்த சாதனையை பகிர்ந்துள்ளார். இன்னும் ஒரு சதமடித்தால் 42 சதங்களுடன், பாண்டிங்கின் சாதனையை தகர்த்துவிடுவார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு சதமடித்தால், ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.