இந்த நாலு பேரும் இல்லான; இப்போ நான் இல்ல - ரிஷப் பந்த் ஓபன் டாக்!

Updated: Sun, Aug 01 2021 20:53 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முக்கிய வீரராக அணியில் இடம் பிடிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அறிமுகமான ரிஷப் பந்த் அந்த அறிமுகப் போட்டியில் சிக்சருடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடங்கிய குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தான் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தும் அசத்தி இருந்தார். 

இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பந்த் பங்கேற்க உள்ளது ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாகவே சிறப்பான பார்மில் இருக்கும் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட 4 நபர்களிடம் தொடர்ந்து அலோசனை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரிஷப்,“பேட்டிங்கில் நான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் நிறைய ஆலோசனைகளை பெறுகிறேன். குறிப்பாக ரோஹித் சர்மாவிடம் நிறைய பேட்டிங் குறித்து பேசுவேன். அனைத்து நுணுக்கங்களையும் அவர் கற்று தருவார். மேலும் விராட் கோலி இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எவ்வாறு விளையாடவேண்டும். பேட்டிங்கில் கால் நகர்வுகள் எப்படி இருக்க வேண்டுமென டெக்னிக்கலாக எனக்கு உதவுவார்.

அதுமட்டுமின்றி மேலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரவி சாஸ்திரி ஆகியோர் எனக்கு மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைகளை வழங்குவார்கள். ஏனெனில் அவர்கள் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடி உள்ளதால் அவர்களுக்கு என்னுடைய பேட்டிங்கில் என்ன முன்னேற்றம் தேவை என்பது நன்றாக தெரியும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை