ENG vs PAK: காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய ஹாரிஸ் சோஹைல்!

Updated: Thu, Jul 08 2021 12:31 IST
Image Source: Google

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதற்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தனி விமனம் மூலம் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஹாரிஸ் சொஹைல் கயமடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் அவர் காயத்திலிருந்து குணமடையும் வரை, அடுத்து வரவுள்ள இரண்டு பயிற்சி ஆட்டங்களில் அவர் பங்கேற்க மாட்டர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஹாரிஸ் சொஹைலின் காயம் இன்னும் குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹாரிஸ் சொஹைல், “அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்து இடத்தை உறுதிப்படுத்துவதும் எனது முக்கிய நோக்கமாகும். அதனால் இன்றைய போட்டியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தேன். 

ஆனால் எனது காயம் இன்னும் குணமடையாததால், இன்றைய போட்டியில் விளையாடமுடியாத்தை எண்ணி மிகவும் ஏமாற்றமடைகிறேன். ஆனாலும் நான் விரைவில் குணமடைந்து மீண்டும் போட்டியில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கார்டிஃப்பில் நடைபெறுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை