ENG vs NZ, 1st Test: ரூட் சதத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!

Updated: Sun, Jun 05 2022 17:37 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கம் சரியாக அமையவில்லை. டாப் 4 பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப இங்கிலாந்து 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பிறகு, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

இந்த இணை 5ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பென் ஃபோக்ஸ் ஒத்துழைப்பு தர, ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதத்தைக் கடந்த ரூட் பவுண்டரி அடித்ததோடு மட்டும் இல்லாமல், ஓடியும் ரன்களை எடுத்து நெருக்கடியை நியூசிலாந்து பக்கம் திருப்பினார்.

இந்த இணை 3ஆம் நாள் ஆட்டநேர முடிவு வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. 6ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததில், ஃபோக்ஸ் எடுத்தது வெறும் 9 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. ரூட் 77 ரன்களுடனும், ஃபோக்ஸ் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இதனால், 4ஆம் நாள் ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்படி 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 115 ரன்களுடனும் பென் ஃபோக்ஸ் 32 ரன்களுடனும் 279 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 

நியூசிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசிய ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை