ENG vs IND, 2nd Test Day 3 : ஜோ ரூட் சதத்தால் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து; பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஜோ ரூட்டின் அபார சதத்தால் 3ஆவது நாளில் அந்த அணி 300 ரன்களைத் தாண்டியது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 150 ரன்களை கடந்தார். ஆனால், மொயீன் அலியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 27 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தர். அடுத்து களமிறங்கிய சாம் கரன் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினாலும், ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது.
இருப்பினும் அந்த அணி 391 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிரைவு செய்தது. அந்த அணியில் ஜோ ரூட் 180 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை நடைபெறும் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.