ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!

Updated: Tue, Jul 25 2023 21:40 IST
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது .

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் இருந்தாலும் மலையின் காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டதால் ட்ராவில் முடிவடைந்தது .

இந்த இரண்டு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 27 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி முயற்சிக்கும் . மறுபுறம் ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற போராடும் .

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் இரண்டு ஜாம்பவான்கள் ஓய்வு பெறப் போகிறார்கள் என அறிவித்து கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஐந்தாவது டெஸ்ட் இருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வருகின்றன. நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பத்திரிகையாளர்களுக்கான அறையில் இருந்து இந்த தகவலை தான் பெற்றேன்.

அவர்களுக்கு எங்கிருந்து இந்த தகவல்கள் கிடைத்தது என்று தெரியவில்லை ஆனால் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஓய்வு பெறப்போவதாக அவர்கள் முணுமுணுத்து கொண்டிருந்ததை நான் கேட்டேன். இவை பெரும்பாலும் வதந்திகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஸ்டீவன் ஸ்மித் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இன்னும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என நான் நினைக்கிறேன். மேலும் டேவிட் வார்னர் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார். எனவே நான் கேட்ட தகவல்கள் வதந்தியாக தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை