இங்கிலாந்து vs இந்தியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Jul 10 2022 11:52 IST
England vs India, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. 

சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை இம்முறை டி20 தொடரில் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைக்கும் அளவுக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா பதிலடி கொடுத்து பழிதீர்த்துள்ளது.

இதையடுத்து இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் இருக்கும் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
  • இடம் - ட்ரெண்ட்ப்ரீட்ஜ், நாட்டிங்ஹாம்
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கனின் ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தத் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இங்கிலாந்து எதிர்பாராத வகையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தங்களது பயணத்தை தோல்வியுடன் துவக்கியுள்ளது.

இருப்பினும் சொந்த மண்ணில் வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க இந்த கடைசி போட்டியில் வெல்ல கடைசி முயற்சியாக அந்த அணியின் அதிரடி வீரர்கள் போராட உள்ளனர். அந்த அணியில் ஜேசன் ராய், கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மறுபுறம் ரோஹித் சர்மா வந்ததும் புத்துணர்ச்சியடைந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு மாஸ் காட்டியுள்ள இந்தியா கடைசி போட்டியிலும் கருணை காட்டாமல் அபாரமாக செயல்பட்டு 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்ல போராட உள்ளது. 

மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விராட் கோலி இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பவேண்டுமென ரசிகர்கள் பிராத்தனை செய்துவருகின்றனர். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிக- 21
  • இந்தியா வெற்றி - 12
  • இங்கிலாந்து வெற்றி - 09

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கே), டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் கர்ரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரிச்சர்ட் க்ளீசன், மேத்யூ பார்கின்சன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  •      பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, டேவிட் மாலன், சூர்யகுமார் யாதவ், லியாம் லிவிங்ஸ்டோன்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி
  •      பந்துவீச்சாளர்கள் - கிறிஸ் ஜோர்டான், ரிச்சர்ட் க்ளீசன், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை