இங்கிலாந்து vs இந்தியா, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய அணி கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5ஆவது போட்டி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
- இடம் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
- நேரம் - மதியம் 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
தற்போது நடைபெறப்போகும் அந்த கடைசி போட்டியில் வெற்றிவாகை சூட போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியில் வென்று கடந்த 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது மிகப்பெரிய சவாலாக அமையப் போகிறது.
ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் அம்பியாக திணறிக் கொண்டிருந்த இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியான வெற்றிகளை குவிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தலைமையில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்துக்கு புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் – புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய அவர்களது தலைமையில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாகவும் அற்புதமாகவும் விளையாடிய இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.
அதனால் மிகுந்த புத்துணர்ச்சியுடன் வலுவான அணியாக மாறியுள்ள இங்கிலாந்து இப்போட்டியில் அதே அதிரடியுடன் விளையாடி தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அதன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
மறுபுறம் ஏற்கனவே பெற்றுக் கொடுத்த 2 வெற்றிகள் உட்பட மொத்தம் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டன் என்று சாதனைப் படைத்த விராட் கோலிக்கு பதில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு, கேப்டன் பதவி பும்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 130
- இந்தியா வெற்றி - 31
- இங்கிலாந்து வெற்றி - 49
- முடிவில்லை - 50
உத்தேச அணி
இங்கிலாந்து - சாக் கிராலி, அலெக்ஸ் லீஸ், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ்/சாம் பில்லிங்ஸ், ஜேமி ஓவர்டன்/ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ பாட்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்தியா - சுப்மன் கில், கே.எஸ்.பாரத்/ரோஹித் சர்மா, சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்/ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (கே), முகமது சிராஜ்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, ஜோ ரூட், சட்டேஷ்வர் புஜாரா
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ்
- பந்துவீச்சாளர்கள் - மேத்யூ பாட்ஸ், ஜஸ்பிரிட் பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன்