இங்கிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப் 1இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானுடனான முதல் போட்டியில் போராடி வெற்றியைப் பெற்றது. அதிலும் அந்த அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பியது.
ஆனாலும் அணியில் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல், பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அயர்லாந்து அணி கடந்த கால ஐசிசி தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு பல நெருக்கடிகளை கொடுத்துள்ளது. இதனால் இந்த சீசனில் அதுபோன்ற நெருக்கடியை அயர்லாந்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதற்கேற்றது போல் பால் ஸ்டிர்லிங், ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஜோஷுவா லிட்டில், மார்க் அதிர், மெக்கர்த்தி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இங்கிலாந்துக்கு நெருக்கடியை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs அயர்லாந்து
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
- நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 1
- இங்கிலாந்து - 0
- அயர்லாந்து - 0
- முடிவில்லை - 1
உத்தேச லெவன்
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, சிமி சிங், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், லோர்கன் டக்கர்
- பேட்டர்: பால் ஸ்டிர்லிங், டேவிட் மாலன், ஹாரி டெக்டர்
- ஆல்-ரவுண்டர்கள்: சாம் கர்ரன், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர்
- பந்துவீச்சாளர்: மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், ஜோசுவா லிட்டில்