Advertisement
Advertisement
Advertisement
Advertisement

England vs ireland

ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
Image Source: Google

ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!

By Bharathi Kannan September 26, 2023 • 21:03 PM View: 181

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

Related Cricket News on England vs ireland