நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Tue, Jun 01 2021 11:06 IST
Image Source: Google

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 2) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : நியூசிலாந்து vs இங்கிலாந்து
  • இடம்: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்.
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய உத்வேகத்துடன் உள்ளது. அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் வில்லியம்சன், அனுபவ வீரர் ராஸ் டெய்லர் அணியின் பேட்டிங் தூணாக உள்ளனர். இவர்கள் இருவரும் களத்தில் நின்றால், வெற்றி நிச்சயம் நியூலாந்து அணிக்கே என்பது உறுதி. மேலும் இவர்களுடன் டாம் லேதம், ஹென்றி நிக்கோலஸ், பிஜே வாட்லிங் என நல்ல ஃபார்மில் உள்ளதால் நியூசிலாந்திற்கு இது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் டிரெண்ட் போல்ட், நெய்ல் வாக்னர், கைல் ஜெமிசன் ஆகியோருடன் அனுபவ வீரர் டிம் சௌதியும் அணியில் இடம் பெறுவார் என்பதால், எதிரணிக்கு கொஞ்சம் சவால் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். 

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் கடைசியாக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடினாலும் சக வீரர்கள் சரிவர விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியில் இல்லாதது இன்னும் அதிக அழுத்தத்தை இங்கிலாந்து அணி மீது ஏற்படுத்தியுள்ளது. 

பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜாக் லீச் ஆகியோர் இருப்பதால், ஒட்டுமொத்த அணியும் பந்து வீச்சை நம்பிய இத்தொடரை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேருக்கு நேர்

சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 105 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 11 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 48 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 45 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உத்தேச அணி விவரம்

இங்கிலாந்து : டொமினிக் சிபிலி, ஜாக் கிரௌலி, ரோரி பர்ன்ஸ் / ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கே), டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப், சாம் பில்லிங்ஸ், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து: டாம் பிளண்டெல், டாம் லேதம், கேன் வில்லியம்சன் (கே), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், டேரில் மிட்செல் / காலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமீசன், டிம் சௌதி, நெய்ல் வாக்னர், டிரெண்ட் போல்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை