England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jul 06 2021 13:09 IST
CRICKETNMORE

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் : சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்
  • நேரம் : மாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளது.

மேலும் இலங்கை அணியுடனான போட்டியில் விளையாடிய வீரர்களாலே இத்தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அணியின் பேட்டிங் வரிசையில் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஈயன் மோர்கன், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் அசத்தி வருகின்றனர். 

பந்துவீச்சில் கரண் சகோதரர்கள், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், டேவிட் வில்லி என அனைவரும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் 

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக் என அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. 

அதற்கேற்றார் போல் பந்துவீச்சில் ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளது.

இரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள், அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 88
  • பாகிஸ்தான் வெற்றி - 32
  • இங்கிலாந்து வெற்றி - 53
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கே), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட், ஆதில் ரஷீத்.

பாகிஸ்தான் - இமாம்-உல்-ஹக், ஃபகர் ஸமான், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சோஹைப் மக்சூத், முகமது நவாஸ், சதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதிர், ஹரிஸ் ரவூஃப்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், சோஹைப் மக்சூத், ஜேசன் ராய், ஜோ ரூட்
  • ஆல்ரவுண்டர்கள் - சாம் கரண், கிறிஸ் வோக்ஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, டேவிட் வில்லி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை