இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Jul 23 2022 22:22 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஹெடிங்க்லே மைதானம், லீட்ஸ்
  • நேரம் - 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

கேசவ் மகாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டு அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியை சந்தித்து.

அதிலும் மார்க்ரம், டி காக், மாலன், வெண்டர் டூசென் என அனைவரும் டக் அவுட்டாகி வெளியேறிது அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் கடைசி போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது. அதனால் கடைசி ஒருநாள் போட்டியிலும் அதே உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் பேட்டிங்கிலும், ரீஸ் டாப்லி, சாம் கரண் ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 65
  • இங்கிலாந்து - 29
  • தென் ஆப்பிரிக்கா - 31
  • டிரா - 1
  • முடிவில்லை - 4

உத்தேச அணி 

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கே), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி,

தென் ஆப்பிரிக்கா - ஜன்னெமன் மலான், குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ் (கே), அன்ரிச் நோர்ட்ஜே, மார்கோ ஜான்சன், தப்ரைஸ் ஷம்சி,

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், குயின்டன் டி காக்
  •      பேட்டர்ஸ் - ராஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஜானி பேர்ஸ்டோ
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், லியாம் லிவிங்ஸ்டோன்
  •      பந்துவீச்சாளர்கள் - அடில் ரஷித், அன்ரிச் நார்ட்ஜே, ரீஸ் டாப்லி, தப்ரைஸ் ஷம்சி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை