ENG vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Jun 30 2021 14:10 IST
England vs Sri Lanka, 2nd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில், இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 1) லண்டனில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - ஓவல், லண்டன்
  • நேரம் - மாலை 5.30 மணி 

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து 

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன், ஒருநாள் போட்டிகளிலும் ஆதிகத்தை செலுத்தி வருகிறது. 

அதிலும் பேர்ஸ்டோவ், ஜோ ரூட், மோர்கன், பில்லிங்ஸ், மோயீன் அலி என அதிரடி வீரர்கள் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்துக்கின்றனர். 

மேலும் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், டேவிட் வில்லி ஆகியோருடன் சாம் கரண், ஆதில் ராஷீத் ஆகியோர் பந்துவீச்சில் அசத்துவதால், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி

குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பெரும் சறுக்கலை சந்தித்து வருகின்றனர். 

அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதது, பேட்டிங்கில் சொதப்புவது ஆகிய காரணங்களினால் இலங்கை அணி படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது. 

தற்போது அந்த அணிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பந்துவீச்சு மட்டும் தான். சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோர் அணியின் துருப்புச்சீட்டாக விளங்கிவருகின்றனர். 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 76
  • இங்கிலாந்து வெற்றி - 37
  • இலங்கை வெற்றி - 36
  • டிரா - 1
  • முடிவில்லை - 2

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்ஸ்டோன், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கே), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், டேவிட் வில்லி, ஆதில் ரஷீத், மார்க் வுட்.

இலங்கை - குசல் பெரேரா (கே), பாதும் நிசங்கா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா, வாணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய லட்சன், சாமிகா கருணாரத்ன, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரம.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், குசல் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - ஜோ ரூட், பாதும் நிசங்கா, தசுன் ஷானகா
  • ஆல்ரவுண்டர்கள் - சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், வாணிந்து ஹசரங்கா
  • பந்து வீச்சாளர்கள் - மார்க் வூட், துஷ்மந்தா சமீரா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை