Zimbabwe Squad: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஒமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதன் காரணமாக இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த தொடருக்கும் தயாராகும் வகையில் இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. 

இத்தொடருக்குகான இலங்கை அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ஜிம்பாப்வே டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரசா தொடரும் நிலையில், நட்சத்திர வீரர்கள் பிரையன் பென்னெட், ரியான் பார்ல், பிளெசிங் முசரபானி, சீன் வில்லியம்ஸ், கிளைவ் மடாண்டே ஆகியோருடன் பிராண்டன் டெய்லருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்

Also Read: LIVE Cricket Score

இலங்கை அணி: சரித் அசலங்கா (கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிஷங்க, குசல் பெரேரா, கமில் மிஷார, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, நுவனிது ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, சமிக கருணாரத்ன, மகேஷ் தீக்ஷன, மதிஷ பத்திரன, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர ஃபெர்னாண்டோ.

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News