இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sat, Nov 05 2022 11:03 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1இல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.

அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள். 

இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தை இலங்கை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. 

இதில் 9இல் இங்கிலாந்தும், 4இல் இலங்கையும் வெற்றி பெற்றன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது. 

உத்தேச லெவன்

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.

இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சமிக கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, கசுன் ராஜித.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், குசல் மெண்டிஸ்
  • பேட்டிங்: டேவிட் மாலன், பதும் நிஷங்கா, அலெக்ஸ் ஹேல்ஸ், சரித் அசலங்கா
  • ஆல்-ரவுண்டர்: லிவிங்ஸ்டோன், சாம் கரன்
  • பந்துவீச்சு: மஹீஷ் தீக்ஷனா, வநிந்து ஹசரங்கா,மார்க் வூட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை