மகளிர் டெஸ்ட் : இந்தியா vs இங்கிலாந்து போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jun 15 2021 14:46 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம்- கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டோல்
  • நேரம் - மதியம் 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

இந்திய மகளிர் அணி

மிதாலில் ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் ஸ்மிருத்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஜூலன் கோஸ்வாமி  போன்ற அனுபவ வீராங்கனைகள் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேசமயம் அதிரடி வீராங்கனை ஷாஃபாலி வர்ம, ராத யாதவ், பூனம் யாதவ் உள்ளிட்ட அறிமுக வீராங்கனைகளும் நாளைய போட்டியில் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வலிமையான பேட்டிங், அபாரமான பந்து வீச்சாளர்கள் என கலவையாக இந்திய மகளிர் அணி நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது. 

இங்கிலாந்து மகளிர் அணி

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி கேத்ரின் ப்ரண்ட்,  நாட் ஸ்கைவர், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோருடன் நாளைய போட்டியில் களம் காண உள்ளது. 

மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எமிலி அர்லோட் அணியில் இடம்பிடித்திருப்பது இங்கிலாந்து அணியின் பலத்தை கூட்டுகிறது. 

இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 13
  • இந்திய அணி வெற்றி- 2
  • இங்கிலாந்து அணி வெற்றி -1
  • டிராவில் முடிந்த ஆட்டங்கள் - 10

உத்தேச அணி 

இந்திய அணி - மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், புனம் ரவுத், தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர்/ அருந்ததி ரெட்டி, ராதா யாதவ் 

இங்கிலாந்து அணி- ஹீதர் நைட் (கே), எமிலி அர்லோட், டாமி பியூமண்ட், கேத்ரின் ப்ரண்ட், நடாஷா ஃபாரன்ட்,சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர், ஃபிரான் வில்சன்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஏமி ஜோன்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டம்மி பியூமண்ட், ஹீதர் நைட் , மிதாலி ராஜ்
  • ஆல்ரவுண்டர்கள் - நடாலி ஸ்கைவர், ஜூலன் கோஸ்வாமி, ஹர்மன்பிரீத் கவுர்
  • பந்து வீச்சாளர்கள் - கேட் கிராஸ், கேத்ரின் ப்ரண்ட், பூஜா வஸ்திரகர், ஷிகா பாண்டே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை