நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் சோஃபியா டாங்க்லி அரைசதம் அடித்து அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டாங்க்லி 67 ரன்களையும், நடாலி ஸ்கைவர் 40 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 134 ரன்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக லதா மந்தல் 30 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டோன், சார்லட் டீன் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடம், மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News