இங்கிலாந்தின் மூத்த டெஸ்ட் வீரர் ஜிம் பார்க்ஸ் காலமானார்!
சசெக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர் ஜிம் பார்க்ஸ். அவர்தான் இங்கிலாந்து நாட்டின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்து வந்த கிரிக்கெட் வீரர் அவருக்கு வயது 90.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் கீழே விழுந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
கடந்த 1930இல் பிறந்த ஜிம் தனது 18ஆவது வயதில் சசெக்ஸ் அணிக்காக விலையாட ஆரம்பித்தார். 739 முதல்தர போட்டிகளை வெற்றிகரமாக விளையாடினார்.
அவர் முதலில் லெக்ஸ்பின்னர் பேட்ஸ்மேனாக ஆரம்பித்தார். அதன்பிறகு விக்கெட் கீப்பராக மாறி இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் முதல்தர போட்டிகளில் 36,000 ரன்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு அதிரடியான ஆட்டக்காரர். அவர் ஏராளமான புதிய ஷாட்களை அடிக்ககூடியவர். ‘ஸ்லாக் ஸ்வீப்’ எனப்படும் முட்டிப்போட்டுக்கொண்டு அடிக்கும் ஷாட்டை உருவாகியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறப்பு குறித்து சசெக்ஸ் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்ததாவது, “90 வயதில் இறந்த ஜிம் பார்க்ஸ்க்கு சசெக்ஸ் கிரிக்கெட் அணி மிகவும் வருத்தம் தெரிவிக்கிறது. ஒரு வாரம் முன்பு வீட்டில் கீழே விழுந்ததால் வொர்திங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது காலமானார்.
அவர்தான் இங்கிலாந்தின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்துவந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர். அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கு அழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளது.