இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி டவுன்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 22 ரன்களில் மந்தனா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 44 ரன்களில் ஆட்டாமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. ஆனால் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் மிதாலி ராஜ் அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். 

இதன்மூலம் மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 57 ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை எடுத்துள்ளது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 59 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கேட் கிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News