ENGW vs INDW, Only Test: பாலோ ஆன் ஆனா இந்தியா; மீண்டும் தடுமாற்றம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் விளையாடி வருகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்களை குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 231 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தானர். இருவரும் அரை சதம் கடந்த அசத்தினர். இருப்பினும் அதற்கடுத்து இந்திய அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதனால் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் பின்தங்கியது இந்தியா.
இந்த பின்னடவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இங்கிலாந்து அணி இந்தியாவை ஃபாலோ ஆன் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீராங்கனை ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போன்று விளையாடி எதிரணி பந்துவீச்சை மிரளவைத்து வருகிறார்.
இதன் மூலம் 18.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்துள்ளது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டி தாமதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா 46 ரன்களுடனும், தீப்தி சர்மா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.